கோட்சே வழியில் போகாதீர்கள்: மாணவர்கள் மத்தியில் முதல்வர் உரை

திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவளவிழா ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கல்விதான் யாராலும் பறிக்கமுடியாத சொத்து. ஓரணியில் தமிழ்நாடு என மாணவர்கள் திரள வேண்டும். அப்படி திரண்டால் தமிழ்நாட்டை யாரும் வெல்ல முடியாது. மாணவர்கள் கோட்சே கூட்டத்துடன் செல்ல வேண்டாம். உங்களுக்கு அரசியல் புரிதல் இருக்க வேண்டும். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்" என்றார்.
Tags :