குற்றால அருவியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்.

by Editor / 07-07-2024 11:13:20am
குற்றால அருவியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்.

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான குற்றாலத்தில் கடந்த வாரம் பெய்த மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சீராக இருந்து வந்தது இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து சென்ற வண்ணம் உள்ளனர் இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வனப்பகுதியில் போதிய அளவு மழை இல்லாததன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவி யிலும்நீர்வரத்து குறைந்துள்ளது மேலும் வார விடுமுறை காலம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை இன்று குற்றால அருவியில் காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க திரண்டு வருகின்றனர் மேலும் குறைந்த அளவே கொட்டும் அருவி நீரில் உற்சாகமாக குளித்து சென்ற வண்ணம் உள்ளனர் அதிகளவு சுற்றுலா பயணிகள் கூட்டம் குற்றால அருவிகளில் இருந்து வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தை கருத்தில் கொண்டு அதிக அளவில் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

 

Tags : குற்றால அருவியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்.

Share via