ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்மாயாவதி.

by Editor / 07-07-2024 11:24:50am
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்மாயாவதி.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி சென்னை வந்தடைந்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக மாயாவதி சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து உடல் வைக்கப்பட்டுள்ள பெரம்பூர் மாநகராட்சி பள்ளி மைதானத்திற்கு செல்கிறார். அவருடன் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் ஆகாஷ் வந்துள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பந்தர் கார்டன் அரசு பள்ளியில் வைக்கப்பட்டுள்ள, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்

 

Tags : ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்மாயாவதி.

Share via
Logo