உள்ளூர் வாகனத்துக்கும் கட்டணம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட வாகன ஓட்டிகள்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் இயங்கி வரும் சுங்கச்சாவடியில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று (செப்.2) காலை சுங்கச்சாவடி வழியாக சென்ற உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கக் கட்டணம் கேட்டதாக தெரிகிறது. இதனால் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கும், ஊழியர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்ககூடாது என போராட்டம் நடத்தி முடிவுக்கு வந்த நிலையில் தற்போது மீண்டும் கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.
Tags : உள்ளூர் வாகனத்துக்கும் கட்டணம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட வாகன ஓட்டிகள்.