சிரியாவில் உடலில் தீ வைத்துக் கொண்டு வித்தியாசமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திய காதல் ஜோடி

சாகச கலைகளில் ஈடுபடும் காதல் ஜோடி ஒன்று தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த எண்ணி உடலில் தீ வைத்து பங்கேற்றனர். கலைஞர்களான ஜோசப் அன்பியம் காதல் ஜோடி தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த முடிவு செய்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கையைப் பிடித்துக்கொண்டு நடந்து வந்த இந்த காதல் ஜோடி முதுகுப்பகுதியில் தாங்களே தீயை பற்ற வைத்துக் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்த நிலையில் சிறிது நேரத்தில் பின்னால் நடந்து வந்த தீயணைப்பு கருவிகளை வைத்து தீயை அணைத்தனர். இந்த விபரீதத்தை செய்த காதல் ஜோடி முறையாக பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :