சிறுமி பாலியல் வன்கொடுமை கூலித் தொழிலாளிக்கு 40 ஆண்டு சிறை- மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2020 ஆம் ஆண்டு தென்குவளவெளி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சங்கர் 45 என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது சம்பந்தமான வழக்கு திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சங்கரை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் நான்காயிரம் ரூபாய் அபராதமும் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 6 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி சரத்ராஜ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Tags : சிறுமி பாலியல் வன்கொடுமை கூலித் தொழிலாளிக்கு 40 ஆண்டு சிறை