நெப்போலியன் மகன் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்-காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து மனு.

நெப்போலியன் மகன் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் பதிவுகளை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும் என நெல்லையைச் சேர்ந்த ஜீவன் அறக்கட்டளை மற்றும் நெப்போலியன் சகோதரர் உள்ளிட்டோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
திரைப்பட நடிகரும் மத்திய அமைச்சருமான நெப்போலியன் மூத்த மகன் தனுஷ். . தசை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளியான தனுஷ் -ற்கும் நெல்லை மாவட்டம் மூலக்கரைப்ட்டியைச் சேர்ந்த பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்ததில் இருந்து இவர்கள் தொடர்பாக சமூக வலை தலங்களில் பல்வேறு கருத்துக்கள் தொடர்ந்து இடம்பெற்று வந்தது. தற்போது தனுஷின் உடல்நிலை குறித்தும் அவரது குடும்ப வாழ்க்கை குறித்தும் பல்வேறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாக தெரிகிறது
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நெப்போலியனின் ஜீவன் டிரஸ்ட் சார்பிலும், நெப்போலியன் சகோதார் கிருபாகரன் சார்பிலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசனை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில் நெப்போலியன் மகன் தனுஷ் மீதான அவதூறு கருத்துக்களை சமூக வலை தளங்களில் இருந்து நீக்க வேண்டும். பதிவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என குறிப்பிட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் தனிநபர், மற்றும் குடும்பத்தினர் மீதான தாக்குதலால் நெப்போலியன் குடும்பம் மனம் உடைந்த நிலையில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்
Tags : நெப்போலியன் மகன் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்-காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து மனு.