ஆசியவிளையாட்டில் பங்கேற்ற வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து

by Staff / 08-10-2023 05:07:40pm
ஆசியவிளையாட்டில் பங்கேற்ற வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 107 பதங்களை வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுக்கள். 107பதங்களை வென்றதன் மூலம் அபாரமான திறன், உறுதி மற்றும் அர்ப்பணிப்பை நமது வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த வீரர்களுக்கு சிறந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் தனித்துவமான சிறப்பான பங்களிப்பால் உலக அரங்கில் நமது மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via