இடைத்தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தீவிரம்

by Staff / 08-09-2023 11:09:58am
இடைத்தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தீவிரம்

6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு செப்டம்பர் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்நிலையில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

 

Tags :

Share via