40 அடி உயரத்தில் இருந்து விழுந்த இளைஞர்:
கிருஷ்ணகிரி அருகே ஆடி கிருத்திகையையொட்டி, நேர்த்திக்கடன் செலுத்தி கொண்டிருந்த இளைஞர் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
குருபரப்பள்ளி அடுத்த எட்றப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஆகாஷ் என்ற இளைஞர் நேர்த்திக்கடன் செலுத்த கிரேன் வாகனத்தில் முதுகில் அலகு குத்திக்கொண்டு 40 அடி உயரத்தில் முருகன் கோவிலை நோக்கி அந்தரத்தில் தொங்கியவாறு பம்பை முழக்கங்களுடன் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது ஆகாஷ் திடீரென 40 அடி உயரத்திலிருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். உடனடியாக இளைஞரை மீட்ட பொதுமக்கள், மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Tags :














.jpg)
.jpg)



