10 கிலோ இலவச உணவு தானியம்: காங்கிரஸ் புதிய வாக்குறுதி

by Staff / 17-05-2024 12:32:14pm
10 கிலோ இலவச உணவு தானியம்: காங்கிரஸ் புதிய வாக்குறுதி

ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் புதிய வாக்குறுதி அளித்துள்ளது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயவேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில், காங்கிரஸ் இந்த வாக்குறுதியை அறிவித்துள்ளது. ஏற்கனவே, ரேஷன் கடைகளில் 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via