மதுரைக்கும், கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது- தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தம் எக்ஸ் வலைதளப் பதிவில்.

by Admin / 19-11-2025 01:26:41pm
மதுரைக்கும், கோவைக்கும்

தமிழ்நாட்டில்  மதுரை ,கோவை முக்கிய நகரங்களாகும். இவ்விரு நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 20 லட்சத்திற்கு குறைவாக மக்கள்இருக்கும் நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் வராது என்கிற செய்தி வந்த நிலையில், அதற்கு பதில்அளிக்கும்முகமாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தம் எக்ஸ் வலைதளப் பதிவில் அது குறித்து இவ்வாறு பதிவிட்டுள்ளார்..

.கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்!
 

 

Tags :

Share via

More stories