பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒரு தலை காதலால் கத்தியால் குத்தி கொலை
ராமேஸ்வரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒரு தலை காதலால் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த வாலிபர் முனிராஜ் (வயது 21) என்பவர் செரவன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்.. பல நாட்களாக முனிராஜ் ஷாலினியை காதலிக்கமாறு வற்புறுத்தி தொடர்ந்து மாணவியை தொல்லை கொடுத்து வந்த நிலையில். இன்று காலை ஷாலினி பள்ளிக்குச் செல்லும் வழியில், அவரை வழிமறித்து தடுத்து நிறுத்தியவர், தன்னை காதலிக்குமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ள நிலையில் ஷாலினி அதற்கு உடன்படாமல் செல்லவும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷாலினியை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளாா்... .மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. கத்தியால் குத்திய வாலிபர் முனிராஜ் தப்பியோட முயன்ற போது பொதுமக்கள் அவரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.. அவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,
இந்தக் கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. பொதுமக்கள் பெரும் திரளாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..
Tags :



















