9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ. 18,000 கோடி நிதியை விடுவித்தார்..
இன்று கோவையில் பிரதமர் நரேந்திர மோடி தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மாநாட்டை தொடங்கி வைத்தார். பிரதம மந்திரி கிசான் அம்மன் நிதி திட்டத்தின் கீழ் 21 வது தவணையாக இந்தியா முழுவதும் உள்ள ஒன்பது கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 18 ஆயிரம் கோடி ரூபாயை விடுவித்தார் இத்திட்டத்தில் தகுதி உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் தலா 2000 ரூபாய் உதவித்தொகை வங்கி நேரடி படம் பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்டது. பிரதமர் இயற்கை விவசாயம் குறித்து பேசுகையில் ஆண்டுக்கு ஒரு முறை ஊடு பயிர் மூலம் விளைச்சலை அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்தார். நிகழ்வில், தமிழக ஆளுநர் ஆர் .என் .ரவி, மத்திய தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் எல்.. முருகன், விவசாயிகள் சங்கத் தலைவர் ஆர். பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..
Tags :


















