பாஜகவில் இணையமாட்டார் ராஜேந்திர பாலாஜி எடப்பாடி பழனிசாமி

தில்லி சென்றுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.மேலும், ராஜேந்திர பாலாஜி சொந்த பணிக்காக தில்லி சென்றுள்ளார். அதை வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறாக செய்தி பரப்பி வருகின்றனர். அதிமுக மீது பற்றுகொண்ட ராஜேந்திர பாலாஜி, அதிமுகவில் தொடர்ந்து நீடிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
Tags :