மூதாட்டிக்கு நேரில் சென்று உதவிய மாவட்ட ஆட்சியர் 

by Editor / 09-08-2021 05:52:21pm
மூதாட்டிக்கு நேரில் சென்று உதவிய மாவட்ட ஆட்சியர் 

 


தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் கம்பம் நகரில் சுருளிப்பட்டி ரோட்டில் குடியிருந்து வரும் வீரபுத்திரன்  மனைவி வீராயிஅம்மாள் . இவர்  தனது வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தார். அதனடிப்படையில் பாட்டியின் வீட்டினை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்  கே. வீ.முரளிதரன் மூதாட்டியின் நிலைமையினை கருதி தனது சொந்த பணத்திலிருந்து 2 போர்வைகள் மற்றும் சேலையினை வாங்கி கொடுத்தார்.


அதனை அடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் கே. வீ.முரளிதரன் உத்தரவின் படி ,உத்தமபாளையம் வட்டாட்சியர் அர்ச்சுனன்,கம்பம் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார்,கம்பம் கிராம நிர்வாக அலுவலர் நஜிம்ஹான் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி கம்பம் மின்வாரிய உதவி பொறியாளர் மணிவண்ணன் வீராயி அம்மாளின் வீட்டிற்க்கு மின் இணைப்பு வழங்கினார்.மூதாட்டியின் கோரிக்கையை ஏற்று தனது வீட்டிற்க்கு மின் இணைப்பு வழங்க உத்தரவு மற்றும் பரிந்துரை செய்த மாவட்ட ஆட்சியருக்கும்,அரசு அதிகாரிகளுக்கும் வீராயிஅம்மாள் கண்ணீர் மல்கிநன்றி தெரிவித்தார்.

--

கம்பம் செய்தியாளர் சரவணன் 

 

Tags :

Share via

More stories