கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மேலும் இரு ஆசிரியர்கள் கைது
அரசு தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மேலும் இரு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு பள்ளியில் பிளஸ் டூ மாணவி உயிரிழந்த நிலையில் நேற்று பயங்கர கலவரம் வெடித்தது. மாணவியின் மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார் செயலாளர் சாந்தி பள்ளி முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இன்று ஆசிரியர் ஹரிப்பிரியா கணித ஆசிரியர் கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நேற்று கலவரத்தின்போது பள்ளியில் இருந்த இருபத்தி ஒரு பேருந்துகள் 2 டிராக்டர்கள் இரண்டு லாரிகள் மற்றும் ஒரு ஜேசிபி முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய கலவரம் தொடர்பாக 320 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 108 பேர் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனிடையே கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சமூக வலை தளங்களை தவறான தகவல்களைப் பதிவிட்டதாக கரூரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
Tags :