குற்றாலம் சித்திரசபை வளாகத்தில் மதுவிருந்துடன் சிக்கன் சாப்பாடு..

by Staff / 21-06-2025 10:21:58pm
குற்றாலம் சித்திரசபை வளாகத்தில் மதுவிருந்துடன் சிக்கன் சாப்பாடு..

தென்காசி மாவட்டம் திருக்குற்றால நாதர் சுவாமி திருக்கோவில் சித்ராசபை தேரடி வீதியில் சுற்றுலா பயணிகள் மது மாமிசம் சமைத்து உண்டு வருகின்றனர் இதை திருக்கோயில் நிர்வாக  அதிகாரியிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை  இந்து சமய சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.சித்திர சபை ரதவீதிகளில் தற்பொழுது குற்றால சீசன் காலம் என்பதால் ஆலய நிர்வாகம் பார்க்கிங் ஏலம் விடப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அது பார்க்கிங் பகுதி என்று எண்ணி அங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு சமையல் செய்து இறைச்சிகளை பயன்படுத்தி மது போதைகளை பயன்படுத்தி வருகின்றனர் இது குறித்து திருக்குற்றால நாதர் ஆலயத்தின் உடைய நிர்வாக அலுவலர் ஆறுமுகத்திடம் கேட்டபொழுது அவர் இது குறித்து குத்தகைதாரிடம் தெரிவித்துள்ளதாகவும் காவல் துறையினுடைய உதவியை கேட்டுள்ளதாகவும் ஆலய நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பொது மக்களுக்கு தெரியும் வண்ணம் இது ஆலய பகுதி மாமிசங்கள் சமைக்கக்கூடாது மது அருந்தக்கூடாது என டிஜிட்டல் போர்டுகள் இன்று இரவு பொருத்தப்பட்டு நாளை காலை முதல் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

Tags : குற்றாலம் சித்திரசபை வளாகத்தில் மதுவிருந்துடன் சிக்கன் சாப்பாடு..

Share via