கல்லூரி மாணவி பலாத்காரம்: வாலிபருக்கு ஆயுள் தண்டனை
புதுக்கோட்டை கந்தர்வகோட்டை தின்னகுளத்தை சேர்ந்தவர் வீரமணி (26). கூலித்தொழிலாளி. இவர், 17 வயது கல்லூரி மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தைக்கூறி அவ்வப்போது பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். 2021ஆம் ஆண்டு நவம்பரில் மாணவியை திருப்பூருக்கு அழைத்துச்சென்று வன்புணர்வு செய்துள்ளார். மாணவியை மீட்ட போலீசார் போக்சோ வழக்கில் வீரமணியை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும், அபராத தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.
Tags :


















