இயக்குனர் ராஜூ முருகன் சகோதரர் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் குரு கொரோனா தொற்றுக்கு பலி

கில்லி பட புகழ் மாறன், இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா, நிதீஷ் வீரா ஆகியோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்து பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது பிரபல இயக்குநர் ராஜூ முருகனின் சகோதரர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்திருப்பது தமிழ் திரையுலக நட்சத்திரங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி ஆகிய வெற்றித் திரைப்படங்களின் இயக்குநர் ராஜூ முருகனின் அண்ணன் குரு எனும் குமரகுருபரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். கொரோனாவுக்கான தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். குரு பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றி வந்தார். இதற்கு முன்னதாக, பலபிரபல ஊடகங்களில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், குருவின் மரணத்திற்கு, திரையுலக நட்சத்திரங்களும், ஊடகத் துறை சார்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags :