தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டிசம்பர் 18 முதல் 21 வரை கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டிசம்பர் 18 முதல் 21 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .கடந்த 24 நேரத்தில் கடலூர் ராமநாதபுரம் ,சென்னை, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சில பகுதிகளில் பரவலாக மழை பதிவாகியுள்ளது .சென்னையில், இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 18 முதல் 21 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2_3 டிகிரி செல்சியஸ் வரை குறைய கூடும் என்றும் அதிகாலை வேளைகளில் தமிழகத்தில் பல இடங்களில் லேசான மூடுபனி காணப்பட வாய்ப்புள்ளதாகவும் நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் உ றை பனி நிலவ வாய்ப்புள்ளதாகவும் தர்மபுரி மற்றும் திருத்தணியில் சமவெளி பகுதியில் குறைந்தபட்சமாக 20.5 c வெப்பநிலை பதிவாகியுள்ளது.
Tags :



















