போலீசாரை தாக்கியவர்களுக்கு புகலிடம் அளித்த வழக்கில் கீழே குதித்து தப்ப முயன்ற தர்மலிங்கத்திற்கு கையில் எலும்பு முறிவு .
ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே உள்ள அரசு மதுப்பானக்கடையில் கடந்த சில தினங்களுக்கு முன் மது அருந்தியவர்களுக்கு இடையே ஏற்பட்டதகராறில் 6 பேர் சேர்ந்து இசக்கி என்பவரை தாக்கி உள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இசக்கி, ரத்த காயங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் தாக்கியவர்களை தேடிய போது, அவர்கள் நேரு சிலை பின்புறம் உள்ள மற்றொரு தனியார் மதுபானக் கூடம் அருகே இருந்துள்ளனர். அவர்களிடம் விசாரித்த வடக்கு காவலர்களான ராம்குமார் மற்றும் கருப்பசாமி ஆகியோர் மறு நாள் காலை காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்.அப்போது மறுப்பு தெரிவித்த கும்பல் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு,காவலர்கள் கையில் இருந்த லத்தியை பிடுங்கி காவலர்களை தாக்கி உள்ளனர்.
இதை தடுக்க சென்ற மற்றொரு காவலரையும் அந்த கும்பல் ஆபாசமாக திட்டிக் சரமாரியாக தாக்கியுள்ளனர். சிறிது நேரத்திற்கு பிறகு காயமடைந்த காவலர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மற்ற காவலர்கள், இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் காவலர்களை கும்பல் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி விருதுநகர் மாவட்டகாவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து போலீஸாரை தாக்கிய பால்பாண்டி, கிளிராஜன், பாஞ்சாலிராஜா, பாண்டியராஜ், சரவண கார்த்திக், முத்துராஜ் ஆகிய 6 பேர் மீதும் அரசு அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்தல், காவலர்களை கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு ராஜபாளையம் வடக்கு போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் போலீஸாரை தாக்கியவர்களுக்கு புகலிடம் அளித்த வனராஜ் ,கருப்பசாமி ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தர்ம லிங்கம் (எ) வெள்ளையன் (32), மணிகண்டன் (22) ஆகிய இருவரை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் ராஜபாளையம் அருகே உள்ள தோட்டத்தில் பதுங்கி இருந்த தர்மலிங்கத்தை இன்று காலை போலீஸார் கைது செய்தனர். அவரை மருத்துவ பரிசோதனைக்காக பைக்கில் அழைத்துச் சென்றபோது, கீழே குதித்து தப்ப முயன்ற தர்மலிங்கத்திற்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.இதனை அடுத்து ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் தர்மலிங்கத்தை நீதின்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags : போலீசாரை தாக்கியவர்களுக்கு புகலிடம் அளித்த வழக்கில் கீழே குதித்து தப்ப முயன்ற தர்மலிங்கத்திற்கு கையில் எலும்பு முறிவு .