பெண்களிடம் இருந்து தப்பிப்பது பெரும்பாடாக உள்ளது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

மகளிர் உரிமைத் தொகையை வழங்கிவிட்டு அரசு படாதபாடு படும் நிலையில், ரூபாய் ஆயிரம் வாங்காத பெண்களிடம் இருந்து தப்பிப்பது பெரும்பாடாக உள்ளது என தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.தென்காசி மாவட்டம் இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பில் தொடக்கம் மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான கையடக்க மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கையடக்க மடிக்கணினியை வழங்கினார். இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர், தமிழக அரசிடம் பணம் இல்லை, அந்த வகையில் மகளிர் உரிமைத் தொகையான ரூபாய் ஆயிரம் கொடுத்து விட்டு தாங்கள் படாத பாடு படுவதாக கூறினார். தமிழகத்தை பொறுத்தவரை ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு ரூபாய் 1000 வழங்கப்பட்டுள்ளது.ஆயிரம் பெற்றுக்கொண்ட பெண்கள் வாயை திறப்பதில்லை எனவும் வாங்காத ஒரு சில பெண்கள் எங்களை படுத்தும் பாட்டில் தப்பித்து ஓடி வருவது பெரும்படாக உள்ளது.மேலும் பேசிய அவர், கிராமப்புற பெண்கள் அட்வான்ஸாக உள்ளனர். தங்களுக்கு வழங்கப்படாத அரியர் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என கேட்கின்றனர் என கூறினார்.
Tags :