பணம் திருட கூலிப்படை ஏவிய பெண் வழக்கறிஞர்: 3 பேர் கைது

ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் புகுந்து சொத்து பத்திரங்கள், நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை திருட கூலிப்படை ஏவிய பெண் வழக்கறிஞர் உட்பட 3 பேரை அடையாறு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அடையாறு, காமராஜர் அவென்யூ, 2வது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (80). இவர் எஸ்பிஐ வங்கியில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஒரு வருடத்திற்கு முன் இறந்து விட்ட நிலையில், ரவிச்சந்திரன் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவர், கடந்த 6ம் தேதி, வழக்கம்போல் வீட்டு வாசலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர், திடீரென அவரது வாயை பொத்தி, வீட்டுக்குள் இழுத்து சென்றனர். அப்போது அவர் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் மற்றும் மேல் வீட்டில் குடியிருந்தவர்கள் ஓடி வந்தனர். உடனே, அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், அடையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் தப்பிய நபர்களின் பைக் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர். அதில், அசோக் நகரை சேர்ந்த கார்த்திக் என்பவரது பைக் என்பது தெரிந்தது.பின்னர் 3 பேரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து கார்த்திக்கை தேடி வருகின்றனர்
Tags :