மாணவனை கத்தியால் குத்திய 5 பேர் கைது

by Staff / 20-03-2024 02:17:54pm
மாணவனை கத்தியால் குத்திய 5 பேர் கைது

வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்வர் (20), வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கல்லூரியில் இருந்து வெளியே வந்த விக்னேஷ்வரை சிலர் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில், படுகாயமடைந்த விக்னேஷ்வரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், விக்னேஷ்வர் அதே கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவியை காதலித்து வந்ததாகவும், இடையில் அந்த மாணவி காதலை முறித்துக்கொண்டதும் தெரிந்தது. ஆனால், விக்னேஷ்வர் அந்த மாணவியை பின்தொடர்ந்து வந்துள்ளார். இதை அறிந்த மாணவியின் சகோதரர் கே. கே. நகரை சேர்ந்த அஜய் (23) என்பவர் தனது நண்பர்களான கல்லூரி மாணவர்கள் சஞ்சய் (20), சந்துரு (19), ஆகாஷ் (19), விக்னேஷ் (19) ஆகியோருடன் சென்று விக்னேஷ்வரை கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories