கோயில்களில் இலவச மாஸ்க் வழங்க திட்டம் - அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கூட்டம் அதிகமாக கூடும் கோயில்களில் இலவசமாக முகக்கவசம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "முகக்கவசம் கட்டாயமில்லை. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்ளலாம்" என்று கூறியிருந்தார். தற்போது வரை தமிழ்நாட்டில், 148 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Tags :