மகள், தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புளியந்தூறை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகள் அருள்ஜோதி சென்னையில் பணிபுரிந்த போது தமிழரசன் என்பவரை காதலித்து 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கர்ப்பிணியான அருள் ஜோதி சென்னையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை அறிந்த அவரது தந்தை அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இருவரின் உடலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags :