கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் கைது

by Staff / 03-04-2023 12:06:46pm
கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் கைது

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு, பேராசிரியர் பாலியல் தொல்லை தருவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் அந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முன்னாள் மாணவி ஒருவரும் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அடையாறு போலீசார், கலாஷேத்ரா கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரி பத்மனை விசாரணைக்கு அழைத்த நிலையில், அவர் திடீரென தலைமறைவானார். இந்நிலையில், பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தனிப்படை போலீசாரால் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo