இரண்டு புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் வடமாநில தொழிலாளர்கள் மூவர் கைது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பந்தலூர் தாலுகா பிதிர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட சக்சஸ் என்ற தனியார் தேயிலைத் தோட்டத்தில் இரண்டு புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்ததை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உத்தரையின்படி ரவி வனச்சரகர் ரவி தலைமையில் வனவர்கள் பிராகாஷ், பெலிக்ஸ் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வந்த நிலையில் புலி இறந்து கிடந்த சக்சஸ் தனியார் எஸ்டேட்டில் பணிபுரியும் மேற்கு வங்கத்தை சேர்ந்த சூரியநாத் பராக், மற்றும் அமன் கொய்யால, சுபித் நண்வார், சந்தேகத்தின் பெயரில் விசாரணை மேற்க்கொண்ட போது அவர்கள் காட்டுப் பன்றியின் மீதுவிஷம் தெளித்ததாகவும் அந்தப் பன்றியை புலிகள் உண்டதும் தெரியவந்தது இதனைத் தொடர்ந்து மூவரையும் கைது செய்த வனத்துறையினர் கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர் புலி இறந்த விவகாரத்தில் நான்கு நாட்களில் துரிதமாக துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்த வனத்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது.
Tags : இரண்டு புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் வடமாநில தொழிலாளர்கள் மூவர் கைது.