குடியிருப்பில் இடிந்து விழுந்த குடியிருப்பின் மேற்கூரை

by Staff / 05-10-2022 04:25:07pm
 குடியிருப்பில் இடிந்து விழுந்த குடியிருப்பின் மேற்கூரை

 சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் சூழ்நிலையில் சென்னை டூமிங் குப்பம் குடியிருப்பில் பிளாக் எண் 63 இல் உள்ள வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.டூமிங் குப்பத்தில் மொத்தமுள்ள 17 கட்டிடங்களில் 9 கட்டிடங்களில் இருந்த 108 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருந்த நிலையில்  மீதம் உள்ள 7 கட்டிடங்களில் உள்ள 68 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படாமல் இருக்கும் சூழ்நிலையில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கயிருக்கும் நிலையில்  ஒதுக்கப்பட்ட புதிய வீடுகளுக்கு உடனடியாக மாற்றம் செய்து தர டூமிங் குப்பம் மக்கள் கோரிக்கை.கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களில் 5 கட்டிடங்கள் வரை இன்னும் காலியாக தான் உள்ளது என அப்பகுதி மக்கள் தகவல்.

 

Tags :

Share via