மனைவியை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவன் கைது

நாமக்கல் மாவட்டம் மேல்முகம் கிராமத்தை சேர்ந்த தனபால் (44), தனது மனைவி கீதாவை (33), மாடு விற்றது குறித்து ஏற்பட்ட தகராறில் தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், இது தற்கொலை என கூறி, அவரது உடலை தூக்கில் தொங்க வைத்துள்ளார். இந்நிலையில், உடலில் இருந்த காயங்களை கண்டுபிடித்த கீதாவின் சகோதரி, சந்தேகத்தின் பேரில் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, தனபாலை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலை நாடகம் அம்பலமானது.
Tags :