முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை
திமுக தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமானதைத்தொடர்ந்து திமுகவின் தலைவராக கடந்த 2018 ஆகஸ்ட் 28ஆம் தேதி ஸ்டாலின் பொறுப்பேற்றார்.திமுக தலைவராக அவர் பொறுப்பேற்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் திமுக தலைவராக பொறுப்பேற்ற தினத்தையொட்டி மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன்,சேகர்பாபு உள்ளிட்ட வர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வைத்தொடர்ந்து அண்ணா அறிவாலயம் சென்ற அவர்,பின்னர் முரசொலி அலுவலகத்திற்கும் சென்றார்.
Tags : முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில்