ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஞ்சலையிடம் தீவிர விசாரணை முக்கியதகவல்கள் கிடைக்கவாய்ப்பு..?

by Editor / 20-07-2024 08:41:26am
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஞ்சலையிடம் தீவிர விசாரணை  முக்கியதகவல்கள் கிடைக்கவாய்ப்பு..?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாஜக நிர்வாகியும், பெண் தாதாவுமான அஞ்சலையிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிறுப்பில் உள்ள தீவிர குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து அஞ்சலையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக்கொலைக்கான காரணம் குறித்து பல முக்கியதகவல்கள் கிடைக்கவாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு:

Share via