பெண்கள் உதவி மையங்கள் திறக்கப்படும்

by Staff / 05-04-2022 11:21:36am
 பெண்கள் உதவி மையங்கள் திறக்கப்படும்

நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் உதவி மையங்கள் திறக்கப்படும் என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது

நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் உதவி மையங்கள் திறக்கப்படும். தற்போது 704 உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 

70 லட்சம் பெண்கள் உதவி மையங்கள் மூலம் உதவிகளை பெற்றுள்ளனர். பெண்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் சம்பவங்களில் நீதி கிடைக்கும் வகையில் இந்த மையங்கள் செயல்படுகின்றன. 

அந்த மையங்கள் மூலம் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் உதவிகள் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று  மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via