நடிகர் கவுண்டமணி 5 கிரவுண்ட்இடம் மீட்பு

பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி 2006 ஆம் ஆண்டில் கோடம்பாக்கத்தில் உள்ள தனது 5 கிரவுண்ட் இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக மூன்று புள்ளி 58 கோடி ரூபாயை அபிராமி பவுண்டேஷன் என்கிற கட்டுமான நிறுவனத்திடம் வழங்கியுள்ளார். அந்நிறுவனம் கட்டுமான பணிகளை முடித்து கொடுக்காததோடு அந்த இடத்தை தனக்குரியதாக ஆக்கிக் கொள்ள முயற்சி எடுத்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கவுண்டமணி வழக்குரைங்கரால் வழக்கு தொடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக கவுண்டமணி இந்த நிலத்தை மீட்பதற்காக சட்ட அடிப்படையில் முயன்று வந்துள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் கட்டுமான நிறுவனம் அவருக்கு இடத்தை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியவை அடுத்து தற்பொழுது அவருக்கு அந்த கட்டி முடிக்கப்படாத கட்டடத்தை காவல்துறையின் துணையோடு மீட்கப்பட்டு கவுண்டமணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Tags :