1200 பட்டாக்களை வழங்கியதோடு மாற்றுத்திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை ஆவடி புறநகர் பகுதி மக்களுக்கு 1200 பட்டாக்களை வழங்கியதோடு மாற்றுத்திறனாளிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். நிகழ்வில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் அமைச்சர் நாசர் முதன்மைச் செயலாளர் அமுதா ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 36 ஆயிரம் வீட்டுமனைப் பட்டாக்கள் தயார் செய்யப்பட்டு. சென்னையைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில், 18 ஆயிரம் பட்டாக்கள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 1200 பட்டாக்களை இன்றைய தினம் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் வழங்கப்பட்டுள்ளது
Tags :