மின் கம்பியில் உரசி வைக்கோல் எரிந்து சேதம்
டிராக்டரில் எடுத்து வந்த வைக்கோல் மின் கம்பி உரசியதில் தீப்பிடித்து சேதமானது. செஞ்சி அடுத்த சிற்றரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலன், 37; விவசாயி. இவர் நேற்று மதியம் 3: 00 மணியளவில் தனது டிராக்டரில் விவசாய நிலத்தில் இருந்து வைக்கோல் ஏற்றி வந்தார். சிற்றரசூர் அருகே வந்த போது மின் கம்பியில் உரசி வைக்கோல் தீப்பிடித்தது. உடன் டிப்பரில் இருந்து டிராக்டரை விடுவித்து தனியாக கொண்டு சென்றனர். தகவல் அறிந்து வந்த செஞ்சி தீயணைப்பு நிலையத்தினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் வைக்கோல் ஏரிந்து சாம்பலானதுடன், டிப்பரும் சேதமானது. அனந்தபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















