போலி மருத்துவர் கைது

by Staff / 18-03-2023 02:18:06pm
 போலி மருத்துவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொதுமக்களுக்கு வீட்டில் வைத்தியம் பாரத்து வந்த போலி டாக்டரை மருத்துவ இணை இயக்குனர் சாந்தி தலைமையிவல் மருத்துவ குழுவினர் கையும் களவுமாக பிடித்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் போலி மருத்துவர்கள் இருப்பதாக மருத்துவ சுகாதாரத் துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரவித்தனர். இந்த நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வெங்கடசமுத்திரம் கிராமத்தில் வீட்டிலேயே பொது மக்களுக்குக ஊசி போடுதல், மருத்துவம் பார்க்கும் பணியை நீண்ட காலமாக செய்து வந்த தேவி என்பவரை தர்மபுரி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சாந்தி நேரடியாக களத்தில் இறங்கி போலி மருத்துவர் வீட்டுக்கே சென்று கையும் களவுமாக பிடித்தார்.அப்போது தேவியின் வீட்டிலிருந்து மருத்து மாத்திரைகள், ஸ்டெத்தஸ்கோப், நெபுலேசர் உள்ளிட்ட உபகரணங்களை கைப்பற்றி போலி மருத்துவர் தேவியின் மீது பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo