இந்திய கம்யூ. தேசியக்குழு உறுப்பினர் பி.சேதுராமன் மறைவு:!

by Editor / 20-05-2021 08:29:43am
இந்திய கம்யூ. தேசியக்குழு உறுப்பினர் பி.சேதுராமன் மறைவு:!

இந்திய கம்யூனிஸ்ட் தேசியக்குழு உறுப்பினர் பி.சேதுராமன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று வெளி யிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன்:

இந்திய கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினரும், மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான பி.சேதுராமன் மறைந்த செய்தி யறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். கல்லூரியில் படிக்கும்போது இடதுசாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் ஒன்றுபட்ட மதுரை மாவட்டச் செயலாளராக சிறப்பாகப் பணியாற்றியவர். தொழிலாளர் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர். ப.மாணிக்கம், கே.டி.கே.தங்கமணி, கே.டி.கே. தர்மர்மணி, தா.பாண்டியன், எம்.ராமமூர்த்தி, பி.டி.நாராயணன், செல்லூர் ஏ.கணபதி, பி. வேம்புலு, எஸ்.நரகிரி உள்ளிட்ட முன்னணி கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களோடு இணைந்து செயலாற்றியவர். தமிழக சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் மாறாத பாசத்துக்குரியவர். நெருக்கடியான காலகட்டங்களில் கட்சியைப் பாதுகாப்பதில் தீவி ரமாகச் செயல்பட்டு வெற்றி கண்டவர். கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டு நீண்ட காலம் பணி யாற்றியவர்.

கட்சியின் உயர்மட்டக் குழுவில் பங்கேற்று சீன நாட்டுக்கு ஆய்வுப் பயணமாகச் சென்று வந்தவர். சேதுராமனைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினரின் துயரில் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்று ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. சேதுராமன் மறை வுக்கு மாநிலம் முழுவதும் கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் தாழ்த்தி மூன்று நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:

இந்தியக் கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினர் பி.சேதுராமன் (65) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், கவ லையையும் தருகிறது. தனது இளம் வயதிலேயே கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் மூத்த முன் னோடிகளின் அன்பை பெற்று கம்யூனிஸ்ட் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டவர். பஞ்சாலைத் தொழிலாளர்கள் ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 1979-ல் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு 54 நாட்கள் சிறையில் இருந்தவர். இடதுசாரி ஒற்றுமையை ஏற் படுத்துவதில் ஆர்வத்துடன் செய லாற்றியவர்.

நெருக்கடியான காலகட்டத்தில் அவரது மறைவு உழைக்கும் வர்க்கத்தினருக்கும், இடதுசாரி கட்சிகளுக்கும் ஏற்பட்ட பேரிழப் பாகும். சேதுராமன் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும் பத்தினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆறு தலையும், அனுதாபத்தையும் தெரி வித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via