ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்து-பல ரயில்கள் ரத்து!

by Editor / 30-10-2023 08:41:18am
 ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்து-பல ரயில்கள் ரத்து!

ஆந்திர மாநிலத்தில் நின்றிருந்த பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், விபத்தை அடுத்து சம்பந்தப்பட்ட ரயில் தடத்தில் செல்லும் ரயில்களின் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டுள்ளது கிழக்கு கடற்கரை ரயில்வே. விபத்தை அடுத்து 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 15 ரயில்கள் மாற்று தடத்தில் திருப்பி விடப்பட்டுள்ளன. 7 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன என கிழக்கு கடற்கரை ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

Tags : பல ரயில்கள் ரத்து!

Share via

More stories