இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

by Editor / 21-01-2025 02:14:07pm
இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

தென்காசி மாவட்டம், வி.கே.புதூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் சதீஷ்குமார் என்பவர் வீராணம் என்கின்ற பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இது குறித்து தெரிந்து கொண்ட அந்த ஊர் பொதுமக்கள் சார்பு ஆய்வாளரை மறித்து கேள்வி எழுப்பதோடு மட்டுமல்லாமல், சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து சென்ற ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி மற்றும் 5-க்கும் . மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

 இருந்தபோதும், கடந்த 2 தினங்களாக நடவடிக்கை எடுக்கவில்லை என பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது சார்பு ஆய்வாளரான சதீஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

 மேலும், சதீஷ்குமாருக்கு உறுதுணையாக இருந்த காவலரான கார்த்திக் என்பவரை அந்த காவல் நிலையத்தில் இருந்து செங்கோட்டை காவல் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 குறிப்பாக, வேலியே பயிரை மேய்ந்ததது போல பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரி ஒருவர், இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்ட சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

Share via