மாணவிக்கு நீதி வேண்டி நடைபெற்ற போராட்டத்தில் சௌமியா அன்புமணி கைது.

அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு கோரியும், திமுக அரசைக் கண்டித்து, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பாமக மகளிர் சங்கம் சார்பாக பசுமைத்தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி தலைமையில் இன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது காவல்துறையினர் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்ததாக கைது செய்தனர். குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதில், நீதி கேட்டு போராடும் எங்களை கைது செய்யும் திமுக அரசுக்கும், காவல் துறைக்கும் பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சௌமியா அன்புமணி பாமக பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட மகளிர் அணி சென்னை திருவல்லிக்கேணி வெங்கட்ராங்கம் பிள்ளை தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தின் அடைக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் தமிழக முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் இந்தக் கைது கண்டித்து கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags :