சென்னை புறநகர் ரயில்கள் இயங்கும் நடைமுறையில் மாற்றம்.

by Admin / 02-01-2025 12:49:14pm
சென்னை புறநகர் ரயில்கள் இயங்கும் நடைமுறையில் மாற்றம்.

சென்னை புறநகர் ரயில்கள் இயங்கும் நடைமுறையில் மாற்றம் -சென்னை தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில்

,சென்னை சென்ட்ரல் திருத்தணி செல்லும் ரயில்களின் நேரம் மற்றும் சென்னை கடற்கரை செங்கல்பட்டு உள்ளிட்ட மார்க்கங்களில் குறிப்பிட்ட சில ரயில்களில் நேரம் ரயில் எண்கள் மாற்றம் செய்யப்படுகின்றன .

ஜனவரி 2ஆம் தேதி முதல் இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன வார நாட்களில் மட்டுமே இந்த ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவிர புறநகர் மின்சார ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

அதன்படி சென்னை சென்ட்ரல் திருத்தணி காலை 7 25 மணி ரயில் ஆவடியில் காலை 8 10 மணிக்கு சென்ட்ரல் திருவள்ளூர் காலை 7:35 மணி ரயில் ஆவடியில் காலை 8 15 மணிக்கு நின்று செல்லும் .சென்னை சென்ட்ரல் திருத்தணி இரவு 8 10 மணி ரயில் கடற்கரை திருவள்ளுவர் இரவு 8 15 மணி இரயில் சென்ட்ரல் அரக்கோணம் இரவு ஒன்பது பத்து மணி ரயில் ஆகியவற்றில் நேரம் மாற்றம் செய்யப்படுகிறது

.கடற்கரை ஆவடி இரவு 9 மணி ரயில் சென்னை பட்டாபிராம் இரவு 10:40 மணி ரயில் கடற்கரை ஆவடி இரவு 10 10 மணி ரயில் ஆகியவற்றின் எண் மாற்றப்படுகிறது. திருத்தணி சென்ட்ரல் மார்க்கத்தில் 6 ரயில்களின் நேரம் என் மாற்றம் செய்யப்படவுள்ளது. கடற்கரை செங்கல்பட்டு மார்க்கத்தில் 15 ரயில்களின் நேரம் மாற்றப்படுகிறது. கடற்கரை தாம்பரம் காலை 6 1 மணி காலை 10:1 மணி ரயில் கடற்கரை செங்கல்பட்டு மாலை 5:55 மணி ரயில் ஆகியவற்றின் நேரம் மாற்றப்படுகிறது கடற்கரை -தாம்பரம் செங்கல்பட்டு- காஞ்சிபுரம் திருமால்பூர் அரக்கோணம் மார்க்கத்தில் 22 ரயில்களின் நேரம் என் மாற்றப்படுகிறது.

ஆவடி சூழல் பேட்டை மார்க்கம் வழி குமிடிப்பூண்டி கடற்கரை வேளச்சேரி மார்க்கத்தில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை. அந்த வகையில் மொத்தம் 25 ரயில்களின் நேரம் மாற்றப்படுகிறது .40க்கு மேற்பட்ட ரயில்களின் எண்கள் மாற்றப்படுகின்றன என்று சென்னை தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via