அதிகரிக்கும் நிபா வைரஸ்.. கட்டுப்பாடுகள் தீவிரம்

by Staff / 13-09-2023 11:47:55am
அதிகரிக்கும் நிபா வைரஸ்.. கட்டுப்பாடுகள் தீவிரம்

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் கடந்த 2018-ம் ஆண்டு முதல் பரவ தொடங்கியது. இதுவரை நிபா வைரஸ் பாதிப்பால் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து வைரஸை கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், கோவை வாளையாறு சோதனைச் சாவடியில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஆய்வு செய்தார். அதன்படி, கோழிகோட்டில் இருந்து வருவோரை தனியாக கண்டறிந்து விபரங்கள் சேகரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories