விமான டிக்கெட் கட்டணம் விமானம் போல உயர்ந்தது.

by Editor / 21-12-2024 03:09:54pm
 விமான டிக்கெட் கட்டணம் விமானம் போல உயர்ந்தது.

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. தூத்துக்குடி, மதுரை, கொச்சி உள்ளிட்ட உள்நாட்டு விமானங்களுக்கான கட்டணமும், சிங்கப்பூர், கோலாலம்பூர், தாய்லாந்து, துபாய் உள்ளிட்ட வெளிநாட்டு விமானங்களுக்கான கட்டணமும் அதிகரித்துள்ளது. கூட்டம் அதிகரிப்பு காரணமாக டிக்கெட் கட்டணம் 3 முதல் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளதால், பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.

சென்னை- தூத்துக்குடி வழக்கமான கட்டணம்  - ₹4,796, இன்றைய - கட்டணம் ₹14,281

சென்னை - மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,300, இன்றைய - கட்டணம் ₹17,695.

சென்னை - தாய்லாந்து வழக்கமான கட்டணம் - ₹8,891, இன்றைய - கட்டணம் ₹17,437.

சென்னை- துபாய் வழக்கமான கட்டணம் - ₹12,871, இன்றைய கட்டணம் - ₹26,752

 

Tags : விமான டிக்கெட் கட்டணம் விமானம் போல உயர்ந்தது.

Share via