9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு 

by Editor / 21-12-2024 10:49:56am
9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 390 கி.மீ., தொலைவில் நிலைகொண்டுள்ளது.விசாகபட்டினத்தில் இருந்து 430 கி.மீ., தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.ஒடிசா - கோலாப்பூரில் இருந்து 610 கி.மீ., தொலைவில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா - தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரும் -இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதைத் தொடர்ந்து 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்.சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்.

 

Tags : 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு 

Share via