அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் டெல்லி பயணம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணயில் அங்கீகரிக்கும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அதன்படி, வரும் மக்களவைத் தேர்தல் கூட்டணியை இறுதி செய்வது குறித்து விவாதிக்க பாஜக நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags :