திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.

திண்டுக்கல் பெரியகோட்டையை அடுத்த குளிப்பட்டி அருகே நாகராஜ்(27) என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் 5-ம் தேதி வெட்டி கொலை செய்த வழக்கில் குழந்தைப்பட்டி காலனி தெருவை சேர்ந்த மகேந்திரன்(21), நடுத்தெருவை சேர்ந்த மாதவன்(23), தெற்கு தெருவை சேர்ந்த விக்னேஷ்வரன்(22) குளிப்பட்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த விஜய்(23), கிரி(21), சுகுமார்(24), ஆகியோரை தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் மகேந்திரன்,மாதவன், விக்னேஷ்வரன், விஜய் ஆகியோரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட எஸ்பி.பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சரவணன், 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து புறநகர் டிஎஸ்பி. சிபி சாய் சௌந்தர்யன் தலைமையிலான போலீசார் 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்
Tags : திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.