மதுரை கோட்டத்தில் 13 அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா.

by Editor / 26-02-2024 09:35:31am
மதுரை கோட்டத்தில் 13 அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா.

சோழவந்தான் ரயில் மேம்பாலம் பிரதமர் துவக்கி வைக்கிறார். திருமங்கலம் அருகே ரயில் மேம்பாலத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்

சாலை வாகன போக்குவரத்து பாதுகாப்பிற்கும், ரயில் கடந்து செல்லும் வரை நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும் சோழவந்தான் ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த ரயில்  மேம்பாலத்தை திங்கட்கிழமை என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதேபோல திருமங்கலம் அருகே ஒரு ரயில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் அந்த புதிய பாலத்திற்கான அடிக்கல்லையும் நாட்டம் இருக்கிறார். 

மதுரை கோட்டத்தில் 13 அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா

இந்திய ரயில்வேயில் ரயில் நிலையங்களை நவீனப்படுத்தவும் பயணிகள் வசதிகளை மேம்படுத்தவும் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. தேசிய அளவில் முதலில் இந்த திட்டத்தில் 1275 ரயில் நிலையங்கள் நவீன மயமாக்கப்பட இருக்கின்றன. 
பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி  இன்று 550 ரயில் நிலையங்களை அம்ரித் ரயில் நிலையங்களாக தரம் உயர்த்தவும், 1500 சாலை மேம்பாலங்கள்/ சுரங்கப்பாதைகள் கட்டவும் அடிக்கல் நாட்ட இருக்கிறார். இதில் 44 ரயில் நிலையங்கள், 193 சாலை மேம்பாலங்கள்/ சுரங்கப்பாதைகள் தெற்கு ரயில்வேயில் அமைகிறது. விரிவான ரயில் பாதை அமைப்புகளை கொண்ட தமிழ்நாடு பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியில் பீடு நடைபோட்டு வருகிறது. தமிழ்நாட்டு ரயில்வே கட்டமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வளர்ச்சி பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வருங்கால தேவைகளை கருத்தில் கொண்டு உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலைய கட்டிடங்கள், மேம்படுத்தப்பட்ட பயணிகள் வசதிகள், அழகியல் சார்ந்த முகப்பு போன்ற அம்சங்களுடன் ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.

 இன்று நடைபெறும் மாபெரும் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள 32 ரயில் நிலையங்களை ரூபாய் 803.78 கோடி செலவில் தரம் உயர்த்த அடிக்கல் நாட்டப்பட உள்ளது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் ரூபாய் 476.72 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 சாலை மேம்பாலங்கள் மற்றும் 106 சுரங்கப்பாதைகள் சாலை வாகன ஓட்டிகள் பயன்பாட்டுக்காக துவக்கி வைக்கப்பட இருக்கிறது. மேலும் தமிழ் நாட்டில்  ரூபாய் 1295.16 கோடி செலவில் கூடுதலாக 30 சாலை மேம்பாலங்கள் கட்ட அடிக்கல் நாட்டப்பட இருக்கிறது. இந்த 140 பாலங்களும் சாலை ரயில் சந்திப்பு லெவல் கிராசிங்குகளுக்கு மாற்றாக அமைகிறது. இதன் மூலம் சாலைகளை பயன்படுத்துவோர் பாதுகாப்பாகவும், ரயில் கடந்து செல்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்காமலும் பயணிக்க முடியும். மேலும் இந்த பாலங்கள் கிராமங்களுக்கும் அதன் அருகில் உள்ள நகரங்களுக்கும் பாதுகாப்பான இணைப்பாக அமைகிறது. ரயில் லெவல் கிராசிங்குகளுக்கு மாற்றாக பாலங்கள் மற்றும் சுரங்க பாதைகள் அமைப்பது சாலையை பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு ரயில்களை வேகமாக இயக்கும் திறனையும் அதிகரிக்கிறது.  விரைவான ரயில் போக்குவரத்தின்  வாயிலாக ரயில் பாதை கட்டமைப்பை முழுமையா பயன்படுத்தவும் வழிவகுக்கிறது. தெற்கு ரயில்வேயில் சென்னை கடற்கரை, கிண்டி, அம்பத்தூர், மாம்பலம், சென்னை பூங்கா, ஜெயின்ட் தாமஸ் மௌண்ட், ஈரோடு, மேட்டுப்பாளையம், மொரப்பூர், பொம்மிடி, திருப்பத்தூர், சின்னசேலம், நாமக்கல், கோயம்புத்தூர் வடக்கு, திருவண்ணாமலை, திருவாரூர், விருத்தாசலம், கும்பகோணம்,  பழனி (13.88 கோடி செலவில்), திருச்செந்தூர் (17.50 கோடி), அம்பாசமுத்திரம்(10.81 கோடி), காரைக்குடி (13.91 கோடி), கோவில்பட்டி (12.72 கோடி), மணப்பாறை (10.11 கோடி), புதுக்கோட்டை (14.48 கோடி), ராமநாதபுரம் (11.95 கோடி), ராஜபாளையம் (11.70 கோடி), பரமக்குடி (10.56 கோடி), திண்டுக்கல் (22.85 கோடி), தூத்துக்குடி (12.37), திருநெல்வேலி (270 கோடி), பொள்ளாச்சி ஆகிய ரயில் நிலையங்கள் அம்ரித் ரயில் நிலையங்களாக தரம் உயர்த்துவதற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

அமிர்த ரயில் நிலையங்களின் சிறப்பம்சங்கள்

* நீண்ட கால தேவைகளை கருத்தில் கொண்டு தேவையான பயணிகள் வசதிகளுடன் ரயில் நிலையங்களை தரம் உயர்த்துதல்
* உள்ளூர் கலை மற்றும் பண்பாட்டில் கவனம் செலுத்தி பயணிகளுக்கு மகிழ்ச்சியான பயண அனுபவங்களை வழங்குதல்
* "ஒரு நிலையம் - ஒரு தயாரிப்பு" திட்டத்தின் கீழ் உள்ளூர் பொருட்களை பிரபலப்படுத்த விற்பனை நிலையங்கள் அமைத்தல்
* தொடர்ந்து அதிகரிக்கும் பயணத் தேவைகளை பூர்த்தி செய்ய கட்டமைப்பு பணிகளை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் செயல்படுத்த சிறப்பு ஏற்பாடுகளை உருவாக்குதல்
* அழகியல் சார்ந்த நுழைவாயில்கள் மற்றும் குறைந்த செலவில் நிறைவான ரயில் நிலைய முகப்புகள் அமைத்தல்
* ரயில் நிலைய அணுகு சாலைகள் விரிவாக்கம், பயன்பாட்டில் இல்லாத கட்டமைப்புகளை நீக்குதல், குடிநீர், ஓய்வு அறை போன்ற பயணிகள் வசதிகளை சென்றடைய குறியீட்டு படங்களுடன் கூடிய தகவல் பலகை, பாதசாரிகளுக்கான தனிப்பாதைகள், உரிய இடங்களில் வாகன காப்பகங்கள், மேம்படுத்தப்பட்ட ஒளி விளக்குகள் ஆகியவை அமைத்தல்
*  தேவைக்கேற்ப வெளிச்சுற்றுவளாக பகுதியுடன் கூடிய இரண்டாவது நுழைவாயில் அமைத்தல்
* போதுமான அளவு மேற்கூரைகளுடன் கூடிய உயர்ந்த நடைமேடைகள் அமைத்தல்
* தரம் வாய்ந்த பொது அறிவிப்பு ஒலிபரப்பும் வசதிகள், ஒளிரும் விளக்குகளுடன் ரயில் நிலைய பெயர் பலகை, மேம்படுத்தப்பட்ட காத்திருக்கும் அறைகள், பயணிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலான குறியீட்டு தகவல் பலகைகள் அமைத்தல்
* வெளிவளாக பகுதியில் புல்வெளி மற்றும் பசுமை நிலப்பரப்பு அமைத்தல்.

 

Tags : மதுரை கோட்டத்தில் 13 அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா.

Share via