மகாராஷ்டிரத்தில் புதிதாக 41 ஆயிரம் பேருக்கு கரோனா

by Editor / 16-01-2022 11:08:52pm
மகாராஷ்டிரத்தில் புதிதாக 41 ஆயிரம் பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 41,327 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 41,327 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 72,11,810 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 40,386 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 68,00,900 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 29 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.இன்றைய நிலவரப்படி 2,65,346 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஒமைக்ரான்:

புதிதாக 8 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,738 ஆக உயர்ந்துள்ளது.

 

Tags :

Share via

More stories